Posts

                                                     எதுகை,மோனை    நடுநிசி இரவு.. வீடு முழுக்க நிசப்தம் படர்ந்து இருந்தது.  சுவர்  கடிகாரத்தின் முள் அசையும் சப்தம்  பிசுறு தட்டாமல் அப்படியே கேட்டது. அன்பு, அவனது மனைவி, மற்றும் 6 மாத குழந்தையும்  அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். சமயலறையில் பெரும் சப்தம் கேட்டது... சப்தம் கேட்டுப் பதற்றமாக எழுந்தாள் அன்பின் மனைவி. அவளை பயம் பற்றிக் கொண்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அன்பை எழுப்பினாள்.அவனோ ! "போடின்னு".. எச்சில் வழிந்த உதட்டைத் துடைத்தவாறு தூக்கத்தைத் தொடர்ந்தான். ஜீரோ வால்ட் பல்பின் மெல்லிய வெளிச்சத்தில் மெதுவாய் நடந்தாள்... கடிகார முட்கள் மட்டும் தங்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. பயத்தில் கடவுளை துணைக்கு அழைத்துக் கொண்டாள். மெதுவாக சமையலறைக் கதவைத் திறந்து பார்த்தாள். ஜன்னல் வழியாகப் பூனை ஒன்று வெளியேறிய சப்தம் கேட்டது. குழந்தைக்கு வைத்திருந்த பால் பவ்டர் மற்றும் மசாலா சாமான்கள் எல்லாம் சமையலறை முழுக்க சிதறிக் கிடந்தது. 'சனியப் புடிச்சப் பூனை! இப்படி பண்ணுது?' காலையில்  குழந்தைக்குப் பால் கொடுக்க பால் பவ்டர்
                                     நீதியல்ல மாறாக அநீதி             விசித்திரமான வழக்குகளை நீதிமன்றங்கள் சந்திப்பது காலம், காலமாக இருந்து வருகின்றன. சமீபத்தில் லக்னோ நீதிமன்றமோ பாபரி வழக்கில் விசித்திரமான தீர்ப்பை வழங்கியது.இதில் தீர்ப்பே விசித்திரத்தைக் கூட்டியது. பாபரி மஸ்ஜிதை தகர்த்து, அங்கு ராமர் கோயில் அமைக்க வேண்டும் என்பது RSS யின் பல ஆண்டுக் கோரிக்கைகளாக இருந்து வந்தன. அதனின் முதற் தயாரிப்பாக ரதயாத்திரை ஏற்பாடு செய்து மக்களை தயார்ப்படுத்தினார்கள் என்பது உலகமறிந்த ஒன்று. கடந்த 1992 ஆம் ஆண்டில் உலகம் பார்க்க பாபரி மஸ்ஜிதை தரை மட்டமாக இடித்துத் தகர்த்தார்கள். இதற்கான முழு தயாரிப்புகளையும் முன்னரே செய்திருந்தார்கள் என்பதும், இதற்கான பல ஒத்திகைகள் பார்த்தார்கள்  என்பதும் வழக்கிற்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கும் மற்றும் உலக மக்களுக்கும் தெரியும்.  பட்டப் பகலில் நடை பெற்ற இந்திய இறையாண்மைக்கும், பன்முகத் தன்மைக்கும் வெடிவைத்துத்  தகர்த்த நிகழ்வு எப்படி சட்டம் படித்த மேதையின் பார்வைக்கு  செல்லாமல் போனதென்பது ஆச்சரிய குறியே! கூனி குருகி கேள்விக் குறியாக மாறிபோனது. இதைப் போன்ற நிகழ்

 

                            இந்தியாவின் தடைக் கற்கள்         விவசாயம்  பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வோடு தொடர்புள்ளது.  விவசாயமில்லா வாழ்வை நினைத்துக் கூட பார்க்க இயலாது. உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் விவசாயத்தைச் சார்ந்தே வாழ்க்கை பயணத்தைப் பயணிக்கின்றன.  விவசாயம் அழிந்தால் உலகம் தன் இயல்பு நிலையை இழக்க நேரிடும்.   இந்தியா செல்ல செழிப்பான நாடு. இங்கு உழைக்கும் மக்கள் அதிகமாக உள்ளார்கள்.  அவர்களை நல்லமுறையில் பார்த்துக்கொள் என்று முகலாய மன்னர் பாபர் மரணிக்கும் நேரத்தில் தனது மகன் ஹூமாயூனிடம் கூறிய விஷயம் இது. ஆம். ..இந்தியா செல்வ செழிப்புடன் உள்ள நாடு இதில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது.   இந்தியாவின் முதுகெலும்பென்று வர்ணிக்கப்படும் விவசாயம் மெதுவாகக் கொல்லும் விஷத்தைச் சாப்பிட்டது போல் கொஞ்சம், கொஞ்சமாக மரணத்தின் வாயிலை நெருங்கிக் கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நம்மை ஆளுபவர்கள் என்றால்  மிகையாகாது. விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மூன்று மசோதாக்களும் மக்க

குறைவாக சிரிப்போம்

                           குறைவாக சிரிப்போம்           அன்று முதல்,இன்று வரை திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் ஒருவரை அடித்து, அவர் படும் துன்பங்களைக் கண்டு ரசிப்பது போன்ற நகைச்சுவை காட்சிகள் அமைக்கப்படுகின்றன.அல்லது ஒருவருடைய உடலமைப்பைக் கேலி செய்வது போன்ற நகைச்சுவை  காட்சிகள் அமைக்கப்படுகின்றன.  பொதுவாக ஒருவரை  அடிக்கும்போதோ அல்லது ஒருவரைக் கேலி செய்யும் போதும் கோபம் ஏற்படுவது தான் மனித இயல்பு. ஆனால், இதுபோன்ற காட்சிகளை  நகைச்சுவை என்ற பெயரில் சிரித்தும், அதனை ரசித்தும் பழகிவிட்டோம். இதனுடைய நீழ்ச்சியாகத் தான், இன்று ஒருவர் பொதுவெளியில் தாக்கப்படும் போதும் அல்லது தன்னை மாய்த்துக் கொள்ளும் போதும் அதைத் தடுக்க வேண்டிய மனிதர்கள் அதனைத் தடுக்காமல் அந்த நிகழ்வுகளவீடியோவாக எடுக்கின்றனர் அல்லது தூரமாகவும் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்து மகிழ்கின்றனர் என்ற எண்ணம் தோன்றுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)        நூல்்: இப்

கல்வியின் முகவரி

                      கல்வியின் முகவரி        குளிர் காலத்தில் வெயில் தேடுவதைப் போன்று .. தமிழகத்தில் சில   அரபிக் மதரஸா தங்கள் இருப்பை உறுதிப்படுத்த மாணவர்களைத் தேடிப் போகும் போது.. எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருபது வருடங்களாக தமிழகத்தில் நவீன கல்வி முறையில் புரட்சி செய்து வருகிறது ஜாமிஆ உஸ்வத்துல் ஹசனா ஷரிஆ கல்லூரி பள்ளப்பட்டி.. மார்க்கம் பற்றி அறியாமையும் , புரியாமையும் தலைவிரித்து ஆடும் தருணத்தில்.. தற்போது பொது நடைமுறையில் வலம் வரும் பாடப்பொருள் தற்கால தலைமுறைகளுக்கு முழுமையாக விளங்குதலுக்குத் தடுப்புச் சுவராய் இருக்கும் என்றே ஒற்ற காரணியால் . மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய கடைசிப் புள்ளியில் நின்று , கல்வி மேதை எங்கள் ஆசான் மௌலானா அப்துர் ரஹீம் ரஷாதி அவர்களால் இந்த கல்விச் சாலை தொடங்கப்பட்டது. “ பாதையில் கிடக்கும் தண்ணீரை அலட்சியமாய் தாண்டி செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் . அதை தாண்டிச் செல்லாமல் , அதன் சிக்கல்களைச் சரிசெய்யும் தன்மைகள் கொண்ட அற்புத மனிதர். அந்த சிந்தனையின் தீபம் அணையாமல் பாதுகாத்து , தன்னிடம் கல்வி கற்க வரும் மாணவர்களிடம் அந்த சிந்தனையின் நிழலை கொடு

நமக்கான இலக்கு

                                                                                                    நமக்கான இலக்கு                தொழிற்சாலைகள்   வெளியேறும் நச்சுக்   கலந்த கரும் புகை போன்று ..!   இஸ்லாத்திற்கு எதிராக விஷக் கருத்துக்களைக் காற்றில் தூவி விடுகிறது     பாஜக அரசு .   " வழக்கறிஞர்கள் , ஊடகவியலாளர்களை நாம் உருவாக்கத் தவறிவிட்டதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் சில கயவர்கள் . தன்னை நோக்கி வரும் பந்துகளைச் சதமாக மாற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் டோணியை   போன்று , ஒவ்வொரு நிகழ்வுகளையும் தனக்குச் சாதகமாக அமைந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக லாவகமாகத்   திருப்பிவிடுவதில்   பாஜக அரசுக்கு கைதேர்ந்த ஒன்றாக மாறிவிட்டது .  " நமக்கென்று வலிமையான ஊடகம் , தெளிவான   வழக்கறிஞர்கள்,  மருத்துவ க்   குழுகளை உருவாக்குவது ,  நம் முன்னால் உள்ள மாதிரிகளைக் காட்ட வழியாக அமையும் . இந்தியாவில் இஸ்லாத்திற்கு எதிராகப் பரப்பிவிடப்பட்ட விஷக் கிருமிகளை அழிக்க மிகப் பெரிய திறப்பாகவும் மாறும் ." " நிர்பயா வழக்கிற்கு தண்ட